சிரியாவில் மோதலில் சிக்கிய மக்கள்
2012 ஜூன் மாதம் 12 செவ்வாய்க் கிழமை- மு.ப 07:34
சிரியாவில் அரசாங்க துருப்பினர்களுக்கும், போராளிகளுக்கும் இடையில் தொடர்சியாக மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மோதல்களுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.
ஹோம்ஸ் நகரம் மற்றும் வடமேல் பகுதியான அல் ஹெபா போன்ற பகுதிகளில் அதிக அளவான மக்கள் சிக்கி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்பட்ட போதும், அதனை இரண்டு தரப்பினரும் மீறியுள்ளனர்.
அரசாங்க துருப்பினர் தொடர்சியாக எறிகனை வீச்சுகளை மேற்கொள்வதுடன், துப்பாக்கி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
அத்துடன் உலங்குவானூர்திகள் மூலமு; தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
