


இலங்கையில் நடத்தப்படவுள்ள பிரிமியர் லீக் போட்டி தொடர்பில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை காண்பதற்கு பாக்கிஸ்தான் கிரிக்கட் வாரியத் தலைவர் ஷாகா அஸ்ரப் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட்டின் தலைவருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றிலேயே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியிலும் பாக்கிஸ்தான் கிரிக்கட் போட்டியாளர்கள் பங்குகொள்ள எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கான ஒப்பந்தத்தையும் பங்களாதேஷ் கிரிக்கட் வாரியத்துடன் மேற்கொள்ளவதற்கு பாக்கிஸ்தான் கிரிக்கட் வாரியம் எதிர்பார்த்துள்ளது.