பொது சுகாதார அதிகாரிகள் போராட்டம்
2012 ஜூன் மாதம் 18 திங்கட் கிழமை- மு.ப 08:43
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
சில தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், சுகாதார அறிக்கை வழங்கல், விசேட சந்திப்புகளில் பங்கேற்காமை போன்ற செயற்பாடுகளை பொது சுகாதா பரிசோதகர்கள் புறக்கணிக்கவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 10 தினங்களுக்குள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்க அதிகாரிகள் தவறும் பட்சத்தில், இந்த போராட்டத்தில் தாமும் இறங்கவிருப்பதாக, அரச குடும்ப வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
