


இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் குழந்தைகளுக்கான பால்மாவின் விலையை குறைக்க நுகர்வோர் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் 19 விதமான குழந்தை பால்மாக்கள் விநியோகத்தில் உள்ளன.
இந்த விலைகள் 2 ரூபாவில் இருந்து 404 ரூபா வரையில் ஒவ்வொரு உற்பத்தியினதும் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல், நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.