


இந்தியாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க தீhமானித்துள்ளதாக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது.
அதன் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் பிரச்சினை, தமிழக மீனவர்களின் பிரச்சினை மற்றும் கச்சத்தீவு விவகாரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு விடயங்களில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு இடம்பெற்ற தமிழக சட்ட சபை தேர்தலில் அண்ணா திராவிட கழகத்துடன் இணைந்து போட்டியிட்ட விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 29 சட்டசபை உறுப்பினர்களை கொண்டுள்ளனர்.
அவர்கள் 176 ஜனாதிபதி வாக்குகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.