


தமது கட்சியின் கொள்கைக்கு உட்பட்டு செயற்பட வேண்டியது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களது கடமை என அதன் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பில் போராடி இருந்தாலும், தமது கட்சி உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவின் கட்சிக்காக உழைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஒன்றிணைந்த பொது எதிர்கட்சி ஒன்றுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.