


ரியோ ப்ளஸ் டுவன்டி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான பிரேஸில் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, மாநாட்டுக்கு இடையில் வெளிநாட்டு தலைவர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங்னை ஜனாதிபதி இன்று சந்திப்பார் என கூறப்படுகிறது.
அத்துடன், நேபாளம், பூட்டான், சிலி போன்ற நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை இன்றைய மாநாட்டில் ஐந்தாவது நிகழ்வாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் உரை இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.