அணியில் இடம் பிடிக்க ஆவல்
2012 ஜூன் மாதம் 21 வியாழக் கிழமை- பி.ப 08:48
செப்டெம்பரில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாக இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் நம்பிக்கை வெளியிட்டள்ளார்.
ஊடகம் ஒன்றுடன் இடம் பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தமது தற்போதைய ஆசையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வேளையில் ஏராளமான அதிர்ச்சிகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் யுவராஜ் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற நோய் கிரிக்கட் வீரர்களுக்கு மாத்திரமின்றி சாதாரண மக்களுக்கும் ஏற்பட கூடாதென தாம் பிரார்திப்பதாகவும் இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
