மூன்று மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளன
2012 ஜூன் மாதம் 27 புதன் கிழமை- பி.ப 07:25
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய ஆகிய மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது தொடர்பான தகவல்களை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தருகிறார்.
இதனிடையே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தருகிறார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் முறை தொடர்பில் விரைவில் கலந்தாலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ அரியனேந்திரன் இது தொடர்பில் தகவல் தருகிறார்.
இதற்கிடையில், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றவுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாபிக் ரஜாப்டின் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஷின் தவிசாளர் அமீர் அலி தகவல் தருகிறார்.
வடமத்திய மாகாண சபையை கலைப்பதற்கான வர்த்தமானியில், மாகாண ஆளுனர் கருணாரட்ண திவுல்கனே கைத்தாச்சிட்டுள்ளார்.
இதனிடையே, சப்ரகமுவ மாகாண சபை இன்றைய தினம் கலைக்கப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த மாகாண சபை கலைப்பது தொடர்பிலான அறிக்கைகளில் ஆளுனர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து மாவட்டங்களினதும் உதவி தேர்தல் ஆணையாளர்களும், தேர்தல் ஆணையாளரால் நாளைய தினம் தேர்தல்கள் செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல் சீர்திருத்தம் என்பன தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
