ஈராக் குண்டு வெடிப்புகளில் பலர் பலி
2012 ஜூன் மாதம் 28 வியாழக் கிழமை- பி.ப 08:00
ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பக்தாத் நகரை அண்டிய பகுதிகளில் இந்த கார்க்குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக சியா நகரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் ஈராக்கில் அதிகமாக வன்முறைகள் இடம்பெறும்மாதாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் இவ்வாறான வன்முறை சம்பவங்களில் 200 பேர் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
