ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் குழப்பம்
2012 ஜூன் மாதம் 28 வியாழக் கிழமை- பி.ப 07:50
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதனை அடுத்து சபை எதிர்வரும் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று முற்பகல் 10 மணியளவில் சபை கூடியபோது ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகமுத்து நந்தகுமார். தாம் இலங்கை தெரிழாளர் காங்கிரஸில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பிரிமையை பெற்றுக்கொண்டதாக கூறினார்.
எவ்வாறாயினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் யோகேஸ்வரன், சபைதலைவர் மீது இவ்வாறு கூற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
