மற்றுமொரு சந்தேக நபர் கைது
2012 ஜூன் மாதம் 30 சனிக் கிழமை- பி.ப 07:59
கட்டுவென படுகொலைகள் தொடர்பான சந்தேக நபரென கருதப்படும் மற்றுமொருவரை இரகசிய காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரி 56 ரக தன்னியக்க துப்பாக்கி, அதற்குரிய மூன்று ரவைகளுடன் கூடிய கூடுகள், 49 ரவைகள் மற்றும் எட்டு 9 மில்லிமீற்றர் ரவைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஜே வி பியினது கூட்டத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்;;டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜூலம்பிட்டியே அரரே கடந்த 19 ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் ஜூலம்பிட்டியே அரரேவின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
