வடக்கு கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகள்
2012 ஜூலை மாதம் 01 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 09:14
யுத்தம் காரணமாக பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல் வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் அதிக அளவில் நிதி உதவி வழங்க முன் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வகையில் எதிர்வரும் மூன்று நான்கு ஆண்டு காலப்பகுதியினுள் ஆசிய அபிவிருத்தி வங்கி 200 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க முன் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
