


அவுஸ்திரேலியாவின் உள்ளுர் 20க்கு 20 தொடரான பிக் பாஸ் லீக்கில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண போட்டித் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார்.
அதன் பின்னர் அவர் இங்கிலாந்தின் கழக அணி சார்பில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.