யாழ்ப்பாண நீதிவானுக்கு தடையுத்தரவு
2012 ஜூலை மாதம் 06 வெள்ளிக் கிழமை- பி.ப 01:55
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் செய்திதாளில் யாழ்ப்பாண நீதிவான் தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் உதயன் ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதற்கு மேன்முறையீடடு நீதிமன்றம் இன்று யாழ்ப்பாண நீதிவானுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேபோல மனுதாரரான உதயன் செய்திதாளின் ஆசிரியரான தேவநாயகம் பிரேமானந்த்தின் கோரிக்கையின் அடிப்படையில் ரிட் தடையுத்தவை பிறப்பிக்காமல் இருக்க ஏதுவான காரணிகளை யாழ்ப்பாண நீதிவான் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் உதயன் செய்தியாசிரியரை கைதுசெய்யும் வகையில்; உத்தரவு எதனையும் பிறப்பிக்ககூடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
யாழ்ப்பாண நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா, உதயன் செய்திதாளின் ஆசிரியரை நீதிமன்றத்துக்கு அழைத்து விளக்கம் கோரியமை தொடர்பிலேயே உதயன் செய்திதாள் ஆசிரியரால் இந்த மனு மேன்முறையீ;ட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுமந்திரனுக்கும் நீதிவானுக்கும் இடையில் இடம்பெற்ற வாதங்களை செய்திதாளில் பிரசுரித்தமை தொடர்பிலேயே உதயன் ஆசிரியர் யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
