


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இன்றைய இரண்டாம்; நாள் ஆட்டம் காலநிலை சீர்கேடு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது முதலாம் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 3 விக்கட்டுகளை இழந்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் தமது முதலாவது இன்னிங்ஸில், 226 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது..