


ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கட் வீரர் பீட்டர்சன், மீண்டும் விளையாடும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட காரரான பீட்டர்சன், அண்மையில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.
தற்போது மீண்டும் அணிக்கு திரும்பும் மனநிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என தாம் எடுத்த முடிவு கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருபதுக்கு -20 மற்றும் ஐ.பி.எல்., போட்டிகள் நடைமுறைக்கு வந்தபின்னர் ஒருநாள் போட்டிக்கு அதிக ஆபத்து உள்ளதாகவும் பீட்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.