International News

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

International 09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் அதிரடி சந்திப்பு : 25 நிமிடங்கள் நடந்தது என்ன?

International 09 June 2026
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் அதிரடி சந்திப்பு : 25 நிமிடங்கள் நடந்தது என்ன?

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு

International 09 June 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு

H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

International 09 June 2026
H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

மோசடிகளில் ஈடுபட்ட 17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

International 09 June 2026
மோசடிகளில் ஈடுபட்ட 17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

International 08 June 2026
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்

International 08 June 2026
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்

பிலிப்பைன்ஸின் சக்திவாய்ந்த நிலஅதிர்வு : உயிரிழப்பு 32 ஆக உயர்வு

International 08 June 2026
பிலிப்பைன்ஸின் சக்திவாய்ந்த நிலஅதிர்வு : உயிரிழப்பு 32 ஆக உயர்வு

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 08 June 2026
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

International 08 June 2026
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

International 08 June 2026
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

International 08 June 2026
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

International 08 June 2026
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

International 08 June 2026
காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

International 07 June 2026
"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!
More News
General09 June 2026

'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

நெட்ப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் 2027ஆம் ஆண்டு ஒளிபரப்பாகவிருக்கும் 'Scooby-Doo: Origins' என்ற நேரடித் தொடர் பற்றிய, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்கூபி-டூ (Scooby-Doo) வரலாற்றையே மாற்றியமைக்கும் வகையில், இதுவரை நாம் கார்ட்டூன் அல்லது கணினி அனிமேஷன் (CGI) மூலம் பார்த்த 'ஸ்கூபி-டூ' கதாபாத்திரத்திற்குப் பதிலாக, உண்மையான நாய் ஒன்றை இந்த கதாபாத்திரத்திற்காகப் பயன்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். வெளியிடப்பட்டுள்ள புதிய முன்னோட்டக் காணொளியின்படி (Trailer), தனது புகழ்பெற்ற நீல-பச்சை நிற கழுத்துப் பட்டையை (Teal collar) அணிந்திருக்கும் இந்த நாய் குட்டியும், அதன் சிறந்த நண்பனான 'ஷாகி' (Shaggy) என்பவரும் ஒரு காட்டிற்குள் முதன்முதலில் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் கவர்ச்சிகரமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்கள் (Cast): இந்தத் தொடரில் நடிக்கும் முன்னணி இளம் நடிகர், நடிகைகளின் விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன: ஷாகி - டானர் ஹேகன் (Tanner Hagen) டாப்னி - மெக்கென்னா கிரேஸ் (Mckenna Grace) வெல்மா - அப்பி ரைடர் ஃபோர்ட்சன் (Abby Ryder Fortson) ஃப்ரெட் - மேக்ஸ்வெல் ஜென்கின்ஸ் (Maxwell Jenkins) இவர்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் போல் வால்டர் ஹவுசர் (Paul Walter Hauser) என்பவரும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கதையின்படி, ஷாகியும் டாப்னியும் தங்களது கோடைகால இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மர்மமான கொலைச் சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த ஒரு பரிதாபகரமான 'கிரேட் டேன்' (Great Dane) ரக நாய் குட்டியை சந்திக்கிறார்கள். அதன் பிறகு, வெல்மா மற்றும் குழுவில் புதிதாக இணையும் ஃப்ரெட் ஆகியோருடன் இணைந்து, அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பயங்கரமான மர்மத்தை எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பதும், அதன் மூலம் புகழ்பெற்ற 'Mystery Inc.' குழு எவ்வாறு உருவாகிறது என்பதும் இந்தத் தொடரில் விரிவாகக் காட்டப்படவுள்ளது. புகழ்பெற்ற 'Hanna-Barbera' கார்ட்டூன் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த பிரமாண்டமான தொடரின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் ஆரம்பமாகின. ஜோஷ் ஆப்பிள்பாம் (Josh Appelbaum), ஸ்காட் ரோசன்பெர்க் (Scott Rosenberg) மற்றும் கிரெக் பெர்லாண்டி (Greg Berlanti) உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இதன் நிர்வாக தயாரிப்பாளர்களாக (Executive Producers) பங்களிக்கின்றனர்.

விபரங்களுக்கு
'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
General09 June 2026

பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோரை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசறை, எல்டப் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்படி, 51 வயதுடைய தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் சின்னையா நவராஜ் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது காயமடைந்த உப தவிசாளரும் அவரது மனைவியும் அன்றைய தினம் இரவே பசறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் உப தவிசாளர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இச்சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், பசறை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.பசறைகாவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபரங்களுக்கு
பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
General09 June 2026

டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!

தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, அரச அதிகாரிகளுக்கு சலுகை விலையிலான தொடருந்து பருவச்சீட்டுகளை (Season Tickets) வழங்குவதற்கான புதிய இணையவழி முறைமை இன்று (9) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த புதிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.புதிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சலுகை விலையிலான பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொடருந்து திணைக்களத்தின் டிஜிட்டல் தளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.இன்றைய ஆரம்ப விழாவில், 35 அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்த பதிவுச் செயல்பாட்டில் கலந்துகொண்டனர்.சலுகை விலை தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற விரும்பும் அரச அதிகாரிகள், தத்தமது நிறுவனங்களின் அது தொடர்பான விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன், 'பிரவேஷ' (Pravesha) கைபேசி செயலி (Mobile App) மூலமாகவோ அல்லது www.pravesha.lk என்ற இணையத்தளம் ஊடாகவோ பதிவு செய்துகொள்ள முடியும்.இவ்வாறு பதிவு செய்துகொள்ளும் அதிகாரிகள், எதிர்வரும் ஜூலை மாதத்துக்கான பருவச்சீட்டுகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை தொடருந்து திணைக்களம் மற்றும் மேல் கொழும்பு தொடருந்து திட்டம் (Greater Colombo Railway Project) ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.இந்த வேலைத்திட்டமானது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் இலக்கை அடைவதற்கு வழிவகுப்பதுடன், தொடருந்து சேவையின் வினைத்திறன், சேவையின் தரம் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!
General09 June 2026

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!

சமூக வலைத்தள ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம், தனது முன்னணி செயலிகளான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்களுக்காக 'Series' என்ற புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. Reels-இன் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்படும் இந்த புதிய வசதியானது, ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்கள் (Creators) மற்றும் பொதுவான பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரு நீண்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக இருந்தால், அதனை Part 1, Part 2 என தனித்தனியாக எடிட் செய்து பதிவிட வேண்டிய தேவை காணப்படுகிறது. இருப்பினும், மெட்டா அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய 'Series' அம்சத்தின் மூலம், நீண்டதொரு காணொளியை தனித்தனியாகப் பதிவிடாமல், ஒரே கிளிக்கில் அனைத்து எபிசோடுகளையும் (Episodes) ஒன்றிணைக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ரீல்ஸ் தளங்களில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட் தொழில்நுட்ப அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தொடர் காணொளிகளை மிகவும் இலகுவாகவும், எபிசோட் வாரியாகவும் வரிசைப்படுத்தி ஒரே இடத்தில் பார்வையாளர்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!
General09 June 2026

5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு - "நிர்வாகம் உடன்பட்டால் நாளை பணிக்குத் திரும்புவோம்" – தொழிலாளர்கள் அறிவிப்பு

ஹட்டன், டிக்ஓயா - டங்கல் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்த நிர்வாகத்துக்கு எதிராக கடந்த 5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் தற்போது வழங்கப்படும் 1,550 ரூபாய் நாளாந்த வேதனத்துக்காக ஆண், பெண் இருபாலாரும் தலா 20 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என நிர்வாகம் கட்டாயப்படுத்தியமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (9) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இதுவரைக் காலமும் நாளாந்த வேதனத்துக்காக ஆண்கள் 16 கிலோகிராமும், பெண்கள் 18 கிலோகிராமும் பறித்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் 19 கிலோகிராம் பறித்துத் தரத் தயாராக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளதுடன், நிர்வாகம் இதற்கு உடன்பட்டால் நாளை (10) முதல் பணிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு -
International News

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

International 09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் அதிரடி சந்திப்பு : 25 நிமிடங்கள் நடந்தது என்ன?

International 09 June 2026
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் அதிரடி சந்திப்பு : 25 நிமிடங்கள் நடந்தது என்ன?

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு

International 09 June 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு

H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

International 09 June 2026
H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

மோசடிகளில் ஈடுபட்ட 17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

International 09 June 2026
மோசடிகளில் ஈடுபட்ட 17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

International 08 June 2026
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்

International 08 June 2026
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்

பிலிப்பைன்ஸின் சக்திவாய்ந்த நிலஅதிர்வு : உயிரிழப்பு 32 ஆக உயர்வு

International 08 June 2026
பிலிப்பைன்ஸின் சக்திவாய்ந்த நிலஅதிர்வு : உயிரிழப்பு 32 ஆக உயர்வு

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 08 June 2026
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

International 08 June 2026
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

International 08 June 2026
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

International 08 June 2026
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

International 08 June 2026
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

International 08 June 2026
காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

International 07 June 2026
"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!
Sports Stories
Explore More
ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற ஒரேயொரு போட்டிக் கொண்ட டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் என்ற பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.சண்டிகரின் நியூ சண்டிகர் மைதானத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறி 152 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.முதலாவது இன்னிங்ஸில் 412 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்ததால் ஃபலோ-ஒன் (Follow-on) முறைக்கு உள்ளாகி, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, வெறும் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இதன்படி, ஆப்கானிஸ்தான் அணியை இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 264 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

விபரங்களுக்கு
மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டது: ஒருநாள் தொடர் இலங்கை வசமானது!

மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டது: ஒருநாள் தொடர் இலங்கை வசமானது!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். முன்னதாக நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியும் மழையினால் கைவிடப்பட்டிருந்தது.அதற்கமைய, மூன்றாவது போட்டி கைவிடப்பட்டதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒருநாள் தொடரொன்றைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை அணித் தலைவர் என்ற பெருமையை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மாவன் அத்தபத்து ஆகிய இருவர் மட்டுமே இந்தச் சாதனையைப் புரிந்திருந்தனர். அதேநேரம், 23 வருடங்களின் பின்னர் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தொடரொன்றை வென்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.அத்துடன், இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் காரி கிர்ஸ்டன் (Gary Kirsten) மற்றும் தலைவர் குசல் மெண்டிஸ் கூட்டணியின் கீழ் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.வெற்றிக்கிண்ணத்தை இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் உள்ளக அரங்கில் பெற்றுக்கொண்டதுடன், சிறியளவிலான கொண்டாட்டமும் இடம்பெற்றது.ஒருநாள் தொடரைத் தன்வசப்படுத்தியுள்ள இலங்கை அணி, அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் மோதவுள்ளது.

விபரங்களுக்கு
மீண்டும் சர்ச்சை:பென் ஸ்டொக்ஸ் மற்றும் அட்கின்சனிடம் அதிரடி விசாரணை!

மீண்டும் சர்ச்சை:பென் ஸ்டொக்ஸ் மற்றும் அட்கின்சனிடம் அதிரடி விசாரணை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களின் பின்னர், திங்கட்கிழமை அதிகாலை வேளையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோர் இரவு நேர விடுதி (Nightclub) ஒன்றில் இருந்தபோது அங்கு "சம்பவம் ஒன்று" இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் சபை தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அந்த சம்பவம் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடாத கிரிக்கெட் சபை, அது குறித்த மேலதிக விபரங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விபரங்கள், இந்த விசாரணைகளின் பின்னர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்துக்கு வெளியே இவ்வாறான சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் ஹரி புரூக் (Harry Brook) இரவு நேர விடுதி காவலாளி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரிய அவருக்கு 30,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதேபோல், ஏஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறிப்பாக, தற்போதைய தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு நேர விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்காலிக தடையை எதிர்கொண்டிருந்தார். எனினும், பின்னர் நீதிமன்ற விசாரணைகளின் மூலம் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீண்டும் ஒரு இரவு நேர விடுதி சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
காற்பந்து வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் 'Trionda' ஸ்மார்ட் பந்து!

காற்பந்து வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் 'Trionda' ஸ்மார்ட் பந்து!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடர், புதிய தொழில்நுட்பப் புரட்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.அதிகளவிலான நாடுகள் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக, 'அடிடாஸ்' (Adidas) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 'ட்ரியோண்டா' (Trionda) என்ற உத்தியோகபூர்வ போட்டிப் பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பானிய மொழியில் 'மூன்று அலைகள்' எனப் பொருள்படும் இந்த பெயர், இந்த முறை போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், நவீன காற்பந்து விளையாட்டின் வேகத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.இந்த 'ட்ரியோண்டா' பந்தின் உட்பகுதியில் 'இனெர்ஷியல் மெசர்மென்ட் யூனிட்' (IMU) எனப்படும் அதிநவீன சென்சார் சிப் (Sensor Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் காற்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.இந்தச் சிறிய சென்சார், ஒரு வினாடிக்கு 500 முறை தரவுகளைப் பதிவுசெய்து, பந்தின் வேகம், முடுக்கம் மற்றும் முப்பரிமாண (3D) நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் பந்து செல்லும் திசையின் ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் நடுவர்களால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.நடுவர்களின் முடிவுகளில் மனிதத் தவறுகளைக் குறைத்து, விளையாட்டின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.குறிப்பாக, நடுவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் Offside முடிவுகள், Handball சர்ச்சைகள் மற்றும் பந்து திசைமாறும் சந்தர்ப்பங்களில், வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு இந்த சென்சார் வழங்கும் நேரடித் தரவுகள் பக்கபலமாக அமையும்.இது குறித்து பிஃபாவின் ஆராய்ச்சி மற்றும் தரநிலைகளுக்கான தலைவர் நிக்கோலஸ் எவன்ஸ் , "முப்பரிமாண வெளியில் பந்து எந்தப் புள்ளியில், எவ்வாறு பயணிக்கிறது என்பதை இந்த சென்சார் துல்லியமாக வெளிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியொன்றின் போது, முழுமையாக மின்னூட்டம் (Charge) செய்யப்பட்ட 15 முதல் 20 வரையிலான 'ஸ்மார்ட்' பந்துகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு பந்தும் போட்டியில் பயன்படுத்தப்படும் போது, தொடர்ந்து 6 மணித்தியாலங்கள் வரை இயங்கும் ஆற்றல் கொண்டவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
விசா சிக்கல்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்தது ஈரான் கால்பந்து அணி!

விசா சிக்கல்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்தது ஈரான் கால்பந்து அணி!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக ஈரான் தேசிய கால்பந்து அணி மெக்சிகோவை சென்றடைந்துள்ளது. இம்முறை அமெரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக, மெக்சிகோவில் தங்கி அவர்கள் தமது இறுதிகட்ட பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.துருக்கியின் அந்தல்யா நகரிலிருந்து தனிநபர் சொகுசு வானூர்தி மூலம் மெக்சிகோவின் டிஹுவானா வானூர்தி நிலையத்தை சென்றடைந்த ஈரான் அணியினருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அணியின் நட்சத்திர வீரர் எஹ்சான் ஹஜ்சாபி தலைமையில், நீல நிற பிளேஸர் மற்றும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்த வீரர்கள் மெக்சிகோ அதிகாரிகளின் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரத்தியேக பேருந்து மூலம் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது வானூர்தி நிலைய வாசலில் திரண்டிருந்த ஈரான் ரசிகர்கள் தேசியக் கொடிகளை அசைத்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.ஈரான் அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதானது தற்போதைய அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ச் சூழலால் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருந்தது. குறிப்பாக, விசாக்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, ஈரான் அணி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டக்சன் நகரில் நடைபெறவிருந்த தனது பயிற்சி முகாமை, கலிபோர்னியா எல்லைக்கு அருகில் உள்ள மெக்சிகோவின் டிஹுவானா நகரிற்கு மாற்றியமைக்க நேரிட்டது.முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வீரர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து, ஈரான் அணி இந்தத் தொடரில் பங்கேற்பது பொருத்தமானது எனத் தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அதற்கு அடுத்த நாளே அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஈரான் தேசிய அணி, உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதிலிருந்து தங்களை எவராலும் விலக்கி வைக்க முடியாது என உத்தியோகபூர்வமாகப் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சச்சினின் சாதனையை உடைத்த சூர்யவன்ஷி - தந்தை நெகிழ்ச்சி

சச்சினின் சாதனையை உடைத்த சூர்யவன்ஷி - தந்தை நெகிழ்ச்சி

15 வயதே ஆன கிரிக்கெட் இளம் சாதனையாளர் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியத் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இதன் மூலம், இந்தியத் தேசிய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, பீகாரில் உள்ள அவரது சொந்த மாவட்டமான சமஸ்திபூரில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களும், வாழ்த்து தெரிவிக்க வரும் பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இது தொடர்பாக, வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ,இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தனது மகிழ்ச்சியையும், வைபவ்வின் கிரிக்கெட் பயணம் குறித்தான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த தேர்வு குறித்துப் பேசிய சஞ்சீவ் சூர்யவன்ஷி, "இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு மாபெரும் தருணம், எங்கள் கனவு நனவாகியுள்ளது. வைபவ் தற்போது இலங்கையில் பயிற்சி பெற்று வருவதால் இன்னும் அவரிடம் பேச முடியவில்லை. அணித் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு என்னிடம் பேசிய வைபவ், தனது இதயம் வேகமாகத் துடிப்பதாகக் கூறினான். அவனுக்குத் தைரியம் கூறி அமைதிப்படுத்தினேன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சர் டொன் பிராட்மேன் ஆகியோருடன் வைபவ்வை ஒப்பிட்டுப் பேசப்படுவது குறித்துக் கேட்கப்பட்ட போது, அந்த ஒப்பீடுகள் முற்றிலும் தவறானவை என்று அவரது தந்தை மறுத்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களின் முதல் பந்திலேயே வைபவ் சிக்ஸர் அடிக்கும் அச்சமற்ற மனநிலை குறித்து அவரது தந்தை விளக்கமளித்தார். "அது முற்றிலும் அவனுடைய சொந்த உத்தி. அவன் போட்டிகளில் விளையாடும்போது, வயது மூத்த சிறுவர்கள் அவனை ஒரு 'குழந்தை' என்று அலட்சியப்படுத்துவார்கள். அப்போது எதிரணியின் நட்சத்திர பந்துவீச்சாளரை நான் அவனுக்குக் காட்டுவேன். வைபவ் வேண்டுமென்றே அந்தப் பந்துவீச்சாளரைக் குறிவைத்து சிக்ஸர் அடிப்பான். தன்னை வயதால் மதிப்பிடாமல், திறமையால் மதிக்க வேண்டும் என்பதற்காக அவனாகவே உருவாக்கிய உத்தி இது" என்று சஞ்சீவ் கூறினார். வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச டி20 கிரிக்கெட் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்திருந்தாலும், அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் (T20, ஒருநாள் போட்டி, டெஸ்ட்) விளையாடவே விரும்புகிறார். ஐபிஎல் போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டம் அறியப்பட்டாலும், 50 ஓவர் போட்டியில் ஒரே போட்டியில் 332 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டையும் அவர் சமமாக விரும்புவதாக அவரது தந்தை தெரிவித்தார்.

விபரங்களுக்கு
பிசிசிஐ-யின் அதிரடி சலுகை : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க சிறப்பு அனுமதி!

பிசிசிஐ-யின் அதிரடி சலுகை : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க சிறப்பு அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் (Vaibhav Suryavanshi) அவரது பெற்றோரும் உடன் இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயதே ஆவதாலும், அவர் முதல்முறையாக சீனியர் அணியில் விளையாட இருப்பதாலும், அவரின் வசதியைக் கருத்திற்கொண்டே பிசிசிஐ இந்த விசேட முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் வீரர் ஒருவரின் சர்வதேசப் பயணத்தின் போது அவரது பெற்றோரும் உடன் தங்குவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியிருப்பது விளையாட்டு தரப்புக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படமான 'AK 64' குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு பிரம்மாண்ட தொகை வேதனமாக பேசப்பட்டு வருவதாக கொலிவூட் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக சில முன்னணி கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமாருக்கு 187 கோடி ரூபாய் வேதனமாக வழங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வேதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தொகை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, நடிகர் அஜித் தரப்பிலிருந்து மிகவும் கடுமையான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனக்கு வழங்கப்படும் முழு வேதனத்தையும் தனது அதிகாரபூர்வ வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அஜித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான கண்டிஷன் தற்போது சினிமா தரப்புக்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து, நடிகை த்ரிஷா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்றிருந்தால், அவரது வாழ்க்கைத் துணை யார் என்பது குறித்தும் பல்வேறு ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், மற்றொரு தரப்பினர் இது த்ரிஷா தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் அல்லது தொடர் ஒன்றுக்கான கதாபாத்திர தோற்றமாக இருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் த்ரிஷா அல்லது அவரது நிர்வாகக் குழுவினரிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதுடன், த்ரிஷாவின் தரப்பிலிருந்து விளக்கம் வெளியாகும் வரை இந்த விவகாரத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் கொலிவூட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, பிரபல மூத்த நடிகர் பிரபு இன்று (08) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடிகர் பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது மருமகனும் உடனிருந்தனர். அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்யை, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபு, தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இச்சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் தரப்புகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தின் ('தலைவர் 173') படப்பிடிப்பு, ரஜினிக்கான சிறப்பு அதிரடிப் பாடல் காட்சியுடன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ரஜினிகாந்தின் பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலுடன் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு அதிரடிப் பாடலுக்குப் பிரபல நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் முறையான படப்பிடிப்புப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு ஆளுமைகளின் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாவதால், கோலிவுட் தரப்புகளில் தற்போதே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விபரங்களுக்கு
ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதம் (இந்திய மதிப்பில்) ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது மனைவி ஆர்த்தி தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், ஆர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ரவி மோகன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகனின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

விபரங்களுக்கு
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57ஆவது வயதில் காலமானார்.   திடீர் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகிற்குள் நுழைந்த அவர், 1997இல் 'இஷ்டமானு நூறு வட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சலீம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் பிரதான நடிப்பில், புஜ்ஜி பாபு சனாவின் இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 135.36 கோடி ரூபாவிற்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி நாட்களைக் கடக்கும் போது, ‘பெத்தி’ திரைப்படம் மேலும் பாரிய வசூல் சாதனைகளை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////