


தற்போது முழுநேர தொடர்நாடக நடிகையாகி விட்ட தேவயாணி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தேவயானியின் கணவர் ராஜகுமாரன் திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் தனது மனைவி தேவயானியையே தனக்கு நாயகியாக்கியுள்ளார்.
திருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத வேண்டும் என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதையாகவே திருமதி தமிழ். உருவாகிறது..
இந்த திரைப்படத்தில் ராஜகுமாரன், தேவயானியுடன் லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, சாருஹாசன், பாண்டு, ரோகிணி, கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார்.