பொஸ்னிய படுகொலை - 500 பேர் புதிதாக இனங்காணல்
2012 ஜூலை மாதம் 11 புதன் கிழமை- பி.ப 08:41
பொஸ்னியன் நகரத்தில் 17 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டவர்களில் மேலும் 500 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொஸ்னியாவில் படுகொலை செய்யப்பட்;டவர்களின் ஒரு தொகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் மீள அடக்கம் செய்யும் நிகழ்வை காண்பதற்காக பலியானவர்களின் 30 ஆயிரம் உறவினர்கள் போட்டாக்கரி நினைவு மயானத்திற்கு சென்றுள்ளனர்.
1995ம் ஆண்டு ஜூலை மாதம் பொஸ்னி;யன் சேர்ப் துருப்பினர் மேற்கொண்ட இனப்படுகொலையின் போது, 8 ஆயிரம் முஸ்லிம்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர், ஐரோப்பாவில் இடம் பெற்ற மிக பாரிய இனப்படுகொலை இதுவென ஐக்கிய நாடுகளின் யுத்த குற்ற ஆராயும் பிரிவும் உறுதிப்படுத்தியிருந்தது.
படுகொலை செய்யப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரம் பேரது சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் சடலங்கள் அகழும் நடவடிக்கைகள் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குரிய நிலையில் கைதுசெய்யப்பட்ட பொஸ்னிய தலைவர்களான ரடோவன், கரட்சிக் மற்றும் ரட்கோ மிளடிக் ஆகியோர் தற்போது சர்வதேச குற்றவியல் ஹேக் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
