200க்கும் அதிகமானவர்கள் கொலை
2012 ஜூலை மாதம் 13 வெள்ளிக் கிழமை- பி.ப 01:39
200க்கும் அதிகமான பொது மக்கள் சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள ட்ரெம்ஷே கிராமத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த உலங்கு வானூர்திகள் மற்றும் யுத்த டாங்கிகள் மூலம் தாக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டதாக, சிரிய எதிர்கட்சியினரும், கிராம வாசிகளும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் சிரியாவின் போராளிகள் தரை மார்க்க தாக்குதல்களை முன்னெடுத்து கொலைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிரியாவின் போராளிகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் கூட்டத் தொடரில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கொலைகளை மேற்கொண்டு வருவதாக, சிரியாவின் அரச தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுவரையில் 16 ஆயிரத்துக்குமு; அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
