


சிரியாவில் ஆட்சி மாற்றத்தை கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்கள் தற்போது உள்நாட்டு யுத்தமாக மாறியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது
இந்தநிலையில் அங்கு போர்க்குற்றங்களும் இடம்பெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையின்படி சிரியாவின் இடலிப், ஹோம்ஸ் மற்றும் ஹமா ஆகிய பிரதேசங்கள் போர்வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
இதேவேளை சிரிய அரசாங்கம் தமக்கு எதிராக போராட்டங்களை நடத்துபவர்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது
இந்தக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், சிரிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கொபி அன்னனின் அனுசரணையில் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறியதாகவே கருதப்படும்