வன்முறை கட்டுப்படுத்த ரஷ்யா ஒத்துழைப்பு
2012 ஜூலை மாதம் 17 செவ்வாய்க் கிழமை- பி.ப 07:35
சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த, ரஷ்யா முன்வர வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அரசியல் முறைமை ஒன்றை அமுலாக்கும் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வருகிறது.
இது நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், சிரிய அரசாங்கம் வன்முறைகளை கைவிடும் வகையில், சிரியாவை ரஷ்யா வலியுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக, சிரிய அரசாங்கத்துக்கு ரஷ்யா தொடர்ந்து ஒத்துழைத்து செயற்படுமாக இருந்தால், வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
