ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு
2012 ஜூலை மாதம் 19 வியாழக் கிழமை- பி.ப 08:02
தென்மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 15 வாகனங்கள் சப்ரகமுவ மாகாண சபையின் தேர்தல் பிரசாரத்தின் பொருட்டு பாவிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ பிக்கந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனினும் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்னவின் இந்த குற்றச்சாட்டை காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தான் முற்றாக மறுக்கிறேன், இது தேர்தல் கால காய்ச்சல் என்றே கூறுவேன்.
இது செப்டம்பர் மாதம் வரையிலும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
