தொடரூந்துகள் இறக்குமதி
2012 ஜூலை மாதம் 20 வெள்ளிக் கிழமை- பி.ப 03:22
சீனாவில் இருந்து 120 தொடரூந்துகள் நேற்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன
இந்த தொடரூந்துகள் கிழக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சின்குவா செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த தொடரூந்துகள் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை
குறித்த சீன நிறுவனமானது 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிவரையில் 180 தொடரூந்துகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த தொடரூந்துகள் உயர் தரத்தை கொண்டவை என்று இலங்கை தொடரூந்து திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
