கொழும்பில் நாளை நீர்விநியோக தடை
2012 ஜூலை மாதம் 20 வெள்ளிக் கிழமை- பி.ப 03:30
கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் 12 மணி நேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
நாளை இரவு 8 மணி தொடக்கம், நாளை மறுதினம் 22 ஆம் திகதி காலை 8 மணிவரை இந்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி பஞ்சிகாவத்தை, மாளிகாவத்தை, ஓல்மோர் வீதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
