


இலங்கையில் தொடர்ந்து இடம்பெறுகின்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு, லண்டனில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக அரசாங்க உறுப்பினர்கள் இவ்வாறான சம்பங்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை, வருந்த தக்கது என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.என்.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் குறைவடைந்திருப்பதாக, இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.