இலங்கைக்கு நிதி
2012 ஜூலை மாதம் 20 வெள்ளிக் கிழமை- பி.ப 06:50
இறுதி கட்டமாக இலங்கைக்கு வழங்க வேண்டிய 420 மில்லியன் டொலர்கள் கடனுக்கான அனுமதி இன்று வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் வைத்து இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய செயற்குழு தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தவுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நாணய பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சி இந்த வருடத்தின் இறுதியில் சீர்செய்யப்படும் என, மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சிங்கபூர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வருடத்தில், இலங்கையின் பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாணய பெறுமதி வீழ்ச்சிக்கான காரணிகள் அடையாளம் காணப்பட்டு, சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
