மன்னார் சம்பவம் - ஜனாதிபதி பணிப்பு
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- மு.ப 07:53
மன்னார் சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபர் என் கே இளங்கோனும் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு செல்ல குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி அனுமதியளிக்கும் படியும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக, தராதரம் பார்க்காது விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்க அமைச்சரினால் கடந்த 18 ஆம் திகதி மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, நீதிமன்ற கட்டடதொகுதியை தாக்கி சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று சகல சட்டதரணிகளும் தமது பணிகளில் இருந்து விலகியிருந்தனர்.
சட்டத்தரணிகளில் இந்த பணி நிறுத்தம் காரணமாக நேற்று நாட்டின் பல நீதிமன்றத்தின் சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
