அடுத்த ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- மு.ப 08:01
அடுத்த ஆண்டுக்கான இராணுவ செலவீனங்களுக்காக அமெரிக்கா சுமார் 33 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டுக்கான இராணுவ செலவீனங்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பில் கடந்த இரண்டு தினங்களாக விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான இராணுவ செலவீனங்களுக்காக 33 லட்சத்து 38 அயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டு படைகளுக்காக 4 லட்சத்து 15ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் செனட் சபையின் ஆய்விற்கு பிறகு ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
