


புருணையில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தொன்றில் 9 இராணுவ அதிகாரிகளும் மூன்று விமானிகளும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் மேலும் இரு இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த வனாந்தர பகுதியில், பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், தலைநகர் பண்டா சீரி பெகவான் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவத்தினரை, புருணையின் ஆட்சியாளர் சுல்த்தான் ஹசனல் பொல்கியா, மருத்துவனைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் படுகாயமடைந்துள்ள போதிலும், அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.