ஒலிம்பிக்ஸ் விளக்கு
2012 ஜூலை மாதம் 22 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 09:46
கடந்த 7 நாட்களாக லண்டனில் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட ஒலிம்பிக்ஸ் ஒளி விளக்கு வட கிரீன்விச்சில் உள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல முன்னாள் மற்றும் தற்போதைய சர்வதேச தரத்தைக் கொண்ட வீரர்கள் 143 பேர் இந்த ஒளி விளக்கை கடந்த 7 நாட்களாக ஏந்திச் சென்றனர்.
அவர்களில், கூடிய வயதைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர் ஒருவரும், மிக இளமையான வீரர் ஒருவரும் ஒன்றாக ஓடியதனை பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் இருந்து கரகோஷம் செய்து அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
லண்டனில் உள்ள 33 உள்ளுராட்சி நகர சபைகளுக்கு ஊடாகச் செல்லும் இந்த ஒளி விளக்கு பிரதான ஒலிம்பிக் கிராமத்தை எதிர்வரும் 27ஆம் திகதி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
