


வட கிழக்கு அமெரிக்காவின் சில பிரதேசங்களை பாரிய சூறாவளியொன்று தாக்கியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் இதுவரையில் இரண்டு பேர் பலியாகியதாக உத்தியோக பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக ஆயிரக்காணக்கானவர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்க காலநிலை அவதான நிலையம் தெல்வா, நியூஜேசி, கென்டக்கி, வேஜீனியா உட்பட பல பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை வெளியிட்டிருந்தமையினால் இந்த அனர்த்தம் காரணமாக பல உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.