நிலுக கருணாரத்ன வாய்பை இழந்துள்ளார்
2012 ஆகஸ்ட் மாதம் 01 புதன் கிழமை- பி.ப 08:06
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட் மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இலங்கை வீரர் நிலுக கருணாரத்ன காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய வீரர் காஷ்யாப் பருப்பலியிடம் தோல்வியடைந்த நிலையிலேயே அவருக்கான இந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது.
இந்த போட்டியில் நிலுக கருணாரத்ன, 21-14, 15-21, 21-9 என்ற கணக்கில் தோல்யடைந்தார்.
நிலுக கருணாரத்னவை வெற்றிக்கொண்ட இந்திய வீரர் காஷ்யாப், உலக பேட் மிட்டன் தரவரிசையில் 21 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
