


'லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012" போட்டிகளின் ஆரம்ப விழாவில், இந்திய விளையாட்டு குழுவினருடன் இணைந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மதுரா நாகேந்திரா எனும் பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.
தாம் விளையாட்டு குழுவைச் சேர்ந்தவர் அல்லவென தெரிவித்த அவர், ஒலிம்பிற்கான இந்திய நிர்வாக குழுவைச் சேர்ந்த உறுப்பினர் எனவும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு குழுவின் ஊர்வலத்தில், தாம் தவறுதலாகவே கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கான மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த செயல் குறித்து லண்டன் ஒலிம்பிக்ஸ் நிர்வாக சபையின் தலைவர் கோ பிரபு கருத்து தெரிவிக்கையில், இது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என தெரிவித்துள்ளார்.