ரஷ்யாவின் உந்துகணை சோதனை தோல்வி
2012 ஆகஸ்ட் மாதம் 08 புதன் கிழமை- பி.ப 01:12
இரண்டு செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்ய உந்துகணை நேற்று தோல்வியடைந்தது..
விண்வெளி ஆராய்ச்சி விடயத்தில் அமெரிக்காவுக்கு இணையாக ரஷ்யா செயல்படுகிறது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் விண்ணுக்கு அனுப்பிய ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.
அதேதினத்தில் ரஷ்யாவின் புரோட்டான் உந்துகணை இந்தோனேசியாவின் டெல்காம் செயற்கைகோள், ரஷ்யன் எக்ஸ்பிரஸ் ஆகிய செயற்கைகோள்களுடன், கசகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இறுதி நேரத்தில் கணிப்பீடுள் நிறைவடைந்த pலையில் விண்ணில் சீறி பாய்ந்த புரோட்டான் உந்துகணை ; நடுவானில் இயந்திர கோளாறால் புவி வட்ட பாதையை சென்றடையாமல் வீழ்ந்தது.
