மெக்சிக்கோவில் இயற்கை அனர்த்தம்
2012 ஆகஸ்ட் மாதம் 09 வியாழக் கிழமை- மு.ப 08:14
மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆயிரத்து 500 பேர் தமது வீடுகளின் இருந்து வெளியேறியுள்ளனர்.
எர்னஸ்டோ என்ற புயல் மெக்சிகோ நாட்டின் கடற்கரை பகுதியை கடுமையாக தாக்கியது.
இதன் காரணமாக சேட்டுமால் நகரில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து.
மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பாரிய சூழல் காற்று வீசியதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த அனர்த்தங்களினால் 2 ஆயிரத்து 500 பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
