இசட் புள்ளி தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு
2012 ஆகஸ்ட் மாதம் 09 வியாழக் கிழமை- பி.ப 07:35
புதிய இசட் புள்ளி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்து மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஐந்து மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களினால் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை தவிர, குருநாகல், நுவரெலியா, கண்டி, மாத்தளை, புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 192 மாணவர்கள் பிரிதொரு மனுவைல தாக்கல் செய்தனர்.
இது தவிர மேலும் மூன்று மனுக்கள் மூன்று சுயாதீன தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இசட் புள்ளி தொடர்பில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்து சகல மனுக்களும் இன்று தலைமை நீதியரசர் ஷிரானி பண்டார நாயகவின் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட குழுhமினால் விசாரணை செய்யாப்பட்டது.
இந்த மனுக்கள் தொடர்பான பரிசீலனைகள் அடுத்தமாதம் மூன்றாம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களின் விசாரணைகளின் பெறுபேறுகள் வெளியான பின்னரே புதிய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர் என தெரிவித்தார்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இஷெட் புள்ளி தொடர்பான பிரச்சினைகள், மாணவர்களை பாதிக்காத வகையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
