ஜப்பான் - தென்கொரியா முரண்
2012 ஆகஸ்ட் மாதம் 10 வெள்ளிக் கிழமை- பி.ப 01:38
தென்கொரிய ஜனாதிபதி லீ மையுங் பாக், தென்கொரிய தீவுப் பகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
உலங்குவானூர்தி மூலம் அவர் இந்த பகுதிக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த தீவு தமக்கு சொந்தமானது என ஜப்பான் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தென் கொரிய ஜனாதிபதியின் இந்த விஜயம், இரண்டு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்கொரிய ஜனாதிபதியின் இந்த விஜயத்தை இடைநிறுத்திக்; கொள்ள வேண்டும் என ஜப்பானிய வெளியுறவுகள் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தீவு தென்கொரியாவினால் டொக்டோ எனவும், ஜப்பானினால் டகாசீமா எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நாடுகளும் இந்த தீவினை தமது வரலாற்றுடன் ஒப்பிட்டு போற்றி வருகின்றன.
