எஸ்.எல்.பி.எல் இன்றைய போட்டிகள்
2012 ஆகஸ்ட் மாதம் 12 ஞாயிற்றுக் கிழமை- பி.ப 07:46
எஸ்.எல்.பி.எல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றன.
முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வடமேல்மாகாண அணி, வடமாகாண அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.
இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
தற்போது பதிலளித்தாடி வரும் வடமேல்மாகாண அணி 11 ஓவர்கள் நிறைவில் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊவா நெக்ஸ்ட் அணிக்கும், மேல் மாகாண கிரிக்கட் டாண்டி அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது..
