ஹுசைன் போல்ட் கிரிக்கட்டுக்கு வருகிறார்
2012 ஆகஸ்ட் மாதம் 13 திங்கட் கிழமை- பி.ப 07:38
இந்த வருடத்திற்கான அவுஸ்திரேலிய பிக் பேஷ் லீக் 20 க்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் தாம் பங்கு கொள்ள உத்தேசித்துள்ளதாக ஹுசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
பிரபல அவுஸ்திரேலிய விளையாட்டு வீரரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் விளையாட்டு கழகத்திற்காகவே இவர் பெரும்பாலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்றிற்கு கடந்த ஜுன் மாதம் ஹுசைன் போல்ட் வழங்கிய செவ்வியொன்றிலும் இதனை சூசகமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஷேன் வோனும் இவரை தமது அணியில் சேர்த்துக்கொள்வதற்கு விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன், அது குறித்து ஹுசைன் போல்ட்டிற்கும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
