ஆப்கானிஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றில் இரண்டு அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டதாக சர்வதேச நேற்றோ படையணியின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றில் இரண்டு அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டதாக சர்வதேச நேற்றோ படையணியின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் காவல்துறையைச் சேர்ந்தவர் முன்னர், நேற்றோ படையணியினரிடமிருந்து பயிற்சி பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து நோட்டோ படையணியினர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், இது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கானிஸ்தான் படைத்தரப்பினருடன், ஒரு லட்சத்து 30 ஆயிரம் சர்வதேச நேற்றோ படையணியினர் இணைந்து, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.