சுரங்க தொழிலாளர்கள் மரணம் - உறவினர்கள் விசனம்
2012 ஆகஸ்ட் மாதம் 19 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 08:27
தென் ஆபிரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் மரணமானவர்கள் குறித்த விபரங்களையோ அல்லது எண்ணிக்கையையோ அதிகாரிகள் வெளியிடவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முன்னர் இது தொடர்பாக உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
இது தவிர பாதிக்கப்பட்டவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறைந்தது, மேலும் 78 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 200 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ஜேக்கப் சூமா உடனடியாக தனது பதவியில் இருந்து இறங்க வேண்டும் என இளைஞர் அணியின் தலைவர் ஜூலியஸ் மலீமா தெரிவித்துள்ள கருத்திற்கு பெருந்தொகையான தென் ஆபிரிக் மக்கள் தமது மகிழ்ச்சியினையும் ஆதரவிமையும் வெளியப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தென் ஆபிரிக்க 702 என்ற வானோலி விடுத்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காணும் நோக்கில் ஏராளமான மக்கள் மருத்துவ மனைக்கு அழுத்தம் தெரிவித்த வண்ணம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தென் நகரான் அடனில், போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலில் குறைந்தது 14 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
ஓரே நேரத்தில் இரு பக்கத்திலும் இருந்து ரொக்கட் குண்டுகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
