பஷீர் சேகுதாவுத் மீது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
2012 ஆகஸ்ட் மாதம் 21 செவ்வாய்க் கிழமை- பி.ப 01:47
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உள்நாட்டு வர்த்தகதுறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத் நேற்று ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தனிப்பட்ட முறையில் தமது கருத்துக்களை வெளியிட்டதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்களிக்குமாறு தெரிவித்தமை கண்டனத்திற்குரியது என்று இன்று ஏறாவூர் சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
21 08 Eravoor people
இது தொடர்பாக எமது செய்தி சேவை பிரதியமைச்சரை இணைத்துக்கொண்டு விளக்கம் கோர பல முறை முனைந்த போதும், அவரது தொலைபேசி இலக்கம் செயற்படவில்லை.
