அசாட் பதிவி விலகல்?
2012 ஆகஸ்ட் மாதம் 22 புதன் கிழமை- பி.ப 01:26
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாட்டை பதவி விலக்குவது தொடர்பில் அரசாங்க உறுப்பினர்கள் ஆலோசித்து வருவதாக, சிரியாவின் உதவி பிரதமர் கோட்ரி ஜாமில் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரை கட்டாயமாக பதவி விலக நிர்பந்திக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு ஊடகங்ளுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு ஒன்றும் புதியதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அசாட் தொடர்பிலான தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் அவர் உடனடியாக பதவி விலக அல்லது விலக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அமெரிக்க அரசாங்கம தெரிவித்துள்ளது.
