ஹம்பாந்தொட்டை துறைமுகம் - மீண்டும் பணிகளுக்கு 600 மில்லியன்
Thursday, 23 August 2012 - 13:04 | DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
8

Shares
1,041

Views
 
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மானப்பணிகளுக்காக சீன வங்கி ஒன்றிடம் 600 மில்லியன் டொலர்களை கடன்பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
 
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், இது தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடம் இருந்து இந்த கடன்தொகை பெறப்படவுள்ளது.
 
இதேவேளை கதிர்காமம் வரையில் தொடரூந்து பாதையை நீடிப்பதற்காக, இதே வங்கியிடம் இருந்து 278 மில்லியன் டொலர்கள் கடன் வாங்கப்படவுள்ளது. 
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் வேதனங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
 
இதன்படி, இதுவரையில் 3000 ரூபாவாக இருந்த தொண்டராசிரியர்களின் வேதனங்கள் எதிர்வரும் காலத்தில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் பந்துலகுணவர்ன தாக்கல் செய்திருந்தார்.
 


You may also like :