டில்லி குற்றவாளிகள் தற்கொலை சந்தேகம்

Saturday, 05 January 2013 - 20:16

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D



புதுடில்கியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயதான இளைஞன் உள்ளிட்ட  6 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17 வயதான இளைஞன் மாத்திரம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
ஏனைய 5 குற்றவாளிகளும் டில்லி திகார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றவாளிகளை, சிறையில் உள்ள ஏனையவர்கள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய குற்றவாளியான ராம்சிங் மூன்றாம் இலக்க அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பவன், அக்ஷய் இருவரும் 4-ம் இலக்க சிறையிலும், வினய், முகேஷ் ஆகிய இருவரும் 7-ம் இலக்க சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
உணவருந்தும் போது மாத்திரம் குறித்த 5 பேரும் தங்களுக்குள்ளே பேசி கொள்வதாக சிறைச்சாலை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றவாளிகள் திகார் சிறைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.
இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் இரவு பகலாக காவல்துறையினர் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து டில்லி மாணவி பாலியல் வன்புணர்வு கொலை  வழக்கில், குற்றவாளிகள் 6 பேர் மீது மின்னணு முறையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips