பொலன்னறுவை சிவன் கோவிலில் புதையல் அகழ்வு

Saturday, 02 February 2013 - 20:24

+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

மகா பராக்கிரமபாகு மன்னன் யுகத்தில் கட்டப்பட்டதாக வரலாற்றில்  குறிப்பிடப்பட்டுள்ள பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டிருந்த இடத்தில் உள்ள கல் சிலேட்டு அகற்றப்பட்டு புதையல் தோண்ட முட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல் அகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலன்னறுவை காவல்நிலைய விசேட குழு இன்று காலை அந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று இரவு இந்த புதையல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் புதையல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக எமது பொலன்னறுவை செய்தியாளர் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க சிவன்கோயில் பகுதிக்கு இரவில் காவலாளி இல்லாததால் இவ்வாறு புதையல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

பொலன்னறுவை தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட தொலைவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நைபென விகாரை என சி;ங்களத்தில் அழைக்கப்படும் பகுதி பொலன்னறுவை ஹிங்குராக்கொட - ஹத்முன ஊடாக வீதியில் அமைந்துள்ளது.

நேற்றைய புதையல் அகழ்வு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips