விஸ்வரூபம் சர்ச்சை, முத்தரப்பு பேச்சுவார்த்தை

Saturday, 02 February 2013 - 20:34

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88

இந்திய திரைப்படம் விஸ்வரூபம் படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படம் வெளியிட தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளமை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு தனது சொத்துக்களை அடகு வைத்து ரூ.90 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், அது வெளிவரா விட்டால் தனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும், அதனால் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி மதசார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும் நடிகர் கமலஹாசன் செவ்வியளித்திருந்தார்..

குடியேற எந்த மாநிலமும் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி மத சார்பற்ற நாட்டில் குடியேறப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்தநிலையில் கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்றும், கர்நாடக மாநிலத்தில் குடியேற வருமாறு அந்த மாநில துணை முதலமைச்சர் ஆர்.அசோக் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

மன வேதனையில்தான் அவர் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயாராக இருப்பதாக துணைமுதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நடிகர் கமலஹாசன் இன்று சென்னை சென்றிருந்தார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொண்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips