General18 May 2013

நீராடச் சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டனர்

வெலிகந்த பிரதேச, மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியானார்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த சிலர், சோமாவதியில், வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர், வெலிகந்த பிரதேச மஹாவலி கங்கையில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞரும் மற்றுமொரு பிள்ளையும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இளைஞரின் சடலம் பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளையின் சடலத்தை காவற்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் தேடி வருவதாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes